World Bank: உலக வங்கி இந்தியாவின் வளர்ச்சி முன்னறிவிப்பை 6.3 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
World Bank: உலக வங்கி இந்தியாவின் வளர்ச்சி முன்னறிவிப்பை 6.3 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

Published on: April 9, 2026 at 12:26 pm
புதுடெல்லி, ஏப்.9, 2026: உலக வங்கி இந்தியாவின் வளர்ச்சி முன்னறிவிப்பை 6.3 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது நடப்பு நிதியாண்டுக்கான புதிய கணிப்பு. உலக வங்கி, இந்தியாவின் வலுவான உள்நாட்டு தேவைகள், முதலீட்டு வளர்ச்சி மற்றும் சேவைத் துறையின் விரிவடைதல் ஆகியவை இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக உள்ளதாகக் கூறியுள்ளது.
முக்கிய காரணங்கள்
உள்நாட்டு தேவை: வலுவான உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீட்டு வளர்ச்சி.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்: இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள். ஜி.எஸ்.டி சீரமைப்பு: குறைந்த விலை நிலை மற்றும் ஜி.எஸ்.டி விகிதக் குறைப்புகள் நுகர்வை ஊக்குவித்தன.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விகிதக் குறைப்புகள் நுகர்வை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உலகளாவிய எரிசக்தி விலை உயர்வு குடும்பங்களின் செலவின திறனை குறைக்கக்கூடும்.
இது குறித்து, தென் ஆசியா உலக வங்கி துணைத் தலைவர் ஜோகன்னஸ் ஸட், “சவாலான உலக சூழ்நிலையிலும் தென் ஆசியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் வலுவாகவே உள்ளன” என்றார்.
இதையும் படிங்க: ரூ.2 லட்சம் கோடி சந்தை.. இந்தியாவின் முதுகெலும்பு தொழில் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com