Assembly Election 2026: தமிழக தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Assembly Election 2026: தமிழக தலைமைச் செயலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published on: April 8, 2026 at 5:53 pm
சென்னை, ஏப் 8 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் முக்கிய நிர்வாக மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
தலைமை செயலாளர் இடமாற்றம்
இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் முருகானந்தத்தை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தலைமை செயலாளராக சாய்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மேலும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக செயல்பட்டு வரும் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் செயல்முறைகள் சீராகவும், நடுநிலையாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தேர்தல் காலங்களில் அரசு அதிகாரிகள் நடுநிலையாக செயல்படுவது முக்கியம் என்பதால், ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்றும் அதிகாரிகள் அல்லது தங்களது சொந்த மாவட்டங்களில் பணியில் இருப்பவர்கள் மாற்றப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் நிலையான நடைமுறையாகும். இதன் அடிப்படையில், தமிழகத்தில் உயர்மட்ட அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் கல்லாப்பெட்டி கூட்டணி.. திமுகவை விமர்சித்த விஜய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com