Assembly Election 2026 : சீர்காழிக்கு மட்டும் நான் மாப்பிள்ளை என மு.க ஸ்டாலின் ஏன் அப்படி சொன்னார் தெரியுமா?
Assembly Election 2026 : சீர்காழிக்கு மட்டும் நான் மாப்பிள்ளை என மு.க ஸ்டாலின் ஏன் அப்படி சொன்னார் தெரியுமா?

Published on: April 8, 2026 at 12:40 pm
சீர்காழி, ஏப்.8, 2026: தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின், சீர்காழியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.7, 2026) பரப்புரை மேற்கொண்டார். அப்போது நான் சீர்காழியின் மாப்பிள்ளை எனக் கூறினார். இவ்வாறு மு.க ஸ்டாலின் ஏன் கூறினார் தெரியுமா? அதற்கு முன்பு, பரப்புரையில் மு.க. ஸ்டாலின் பேசியதை பார்க்கலாம்.
மு.க ஸ்டாலின் பரப்புரை
சீர்காழியில் தனது கூட்டணி கட்சி ம.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் மு.க ஸ்டாலின். அப்போது, “தமிழகத்தின் மற்ற ஊர்களுக்கு நான் முதல்வர்; சீர்காழிக்கு மட்டும் நான் மாப்பிள்ளை” என்றார். மேலும், “7ஆவது முறை திராவிட மாடல் அரசு அமைக்க, உங்கள் ஊரில் பெண் எடுத்தவர் என்ற உரிமையோடு வந்துள்ளேன்” எனவும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து, “5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்த கடமையோடு உங்களிடம் வாக்கு கேட்கிறேன்” எனவும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். அதாவது, மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்கா பிறந்த மாவட்டம் என குறிப்பிட்டு இவ்வாறு பேசியுள்ளார். மு.க ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, சூரக்காடு பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்களை ஏமாற்றும் மன்னராட்சி.. தி.மு.க.வை விமர்சித்த சசிகலா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com