கோடைமழையால் குளுகுளு.. சென்னை மக்கள் மகிழ்ச்சி

Sudden Rain Across Chennai : கடும் கோடை வெயிலால் அவதிப்பட்டிருந்தநிலையில், திடீர் கனமழை குளிர்ச்சி அளித்து சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: April 6, 2026 at 3:07 pm

சென்னை, ஏப்ரல் 6 2026: சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்ததால், கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நகரின் முக்கிய பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து குளிர்ச்சியான சூழல் உருவானது. வெயிலால் அவதிப்பட்டிருந்த பொதுமக்களுக்கு இந்த மழை பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

சென்னை சென்டிரல், கோயம்பேடு, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, புரசைவாக்கம், தாம்பரம், பல்லாவரம், வடபழனி, ஈக்காட்டுதாங்கல், குரோம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், அடையாறு, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து மந்தமாக இருந்தாலும், நீண்ட நாட்களுக்கு பிறகு வெப்பம் குறைந்ததால் மக்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர். மேலும், வளிமண்டல மாற்றம் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க இந்திய கிறிஸ்துவ மதச்சார்பற்ற கட்சி அதிமுகவுக்கு ஆதரவு.. மு.க ஸ்டாலின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com