அமெரிக்காவின் அடிமை மோடி.. பிரியங்கா காந்தி

Priyanka Gandhi’s Assam Row: அமெரிக்காவின் அடிமை மோடி என விமர்சித்துள்ளார் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

Published on: April 4, 2026 at 12:30 pm

கௌகாத்தி, ஏப்.4, 2026: அஸ்ஸாம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பிரியங்கா காந்தி பரப்புரை செய்கையில், பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் அடிமை என விமர்சித்தார். நசிராவில் நடைபெற்ற பெரிய தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து, அவரை “அமெரிக்காவின் அடிமை” என்று கூறினார். அதேபோல் அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை, பிரதமர் நரேந்திர மோடியின் அடிமை என்றார்.

இது குறித்து பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “கடந்த தேர்தலில் அவர்கள் இரட்டை எஞ்சின் அரசு என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் நடத்தியது இரட்டை அடிமை அரசு. மோடி ஜி அமெரிக்காவின் அடிமையாகிவிட்டார், அவரது கொள்கைகளால் நாடு முழுவதும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஹிமந்தா ஜி மோடி ஜியின் அடிமை. இதன் மூலம் இந்த அழகான, சுயமரியாதை கொண்ட அஸ்ஸாம் மாநில மக்களை அடிமைகளாக வைத்திருக்க விரும்புகிறார்கள்” என்றார்.

இதையும் படிங்க: போலி ஆதார் கார்டுகளுடன் சுற்றித் திரிந்த வங்கதேசிகள்.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது.. டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கருத்து! Tamil Growth Among Gen Z

ஜென்ஸி தலைமுறையிலும் தமிழ் வளர்கிறது.. டெல்லி கம்பன் கழகக் கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கருத்து!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com