100 சதவீத வெற்றி.. திருச்சியில் மு.க ஸ்டாலின் பரப்புரை!

Assembly election 2026: திருச்சியில் 100 சதவீத வெற்றியை தர வேண்டும் என தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: April 1, 2026 at 11:39 am

திருச்சி, ஏப்.1, 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பரப்புரை பணிகள் தீவிரம் எடுத்து வருகின்றன. மாநிலத்தில் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்.23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே மாதம் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று திருச்சியில் வாக்கு வேட்டையில் ஈடுபட்டார். காலை நடைபயிற்சிக்கு சென்றும் வாக்கு வேட்டை நடத்தினார்.

100 சதவீத வெற்றி..

நன்றி: ஐ.ஏ.என்.எஸ்

இந்த நிலையில், பரப்புரையில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின் “2021 சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் உள்ள 9 தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கு வெற்றியை தந்தீர்கள். அதேபோல் இம்முறையும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

திருச்சி நட்சத்திர தொகுதி

திருச்சி கிழக்கில் இம்முறை நடிகர் விஜய் போட்டியிடுகிறார். இதனால் இந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியுள்ளது. மேலும், விஜய் கொளத்தூருக்கு அருகில் உள்ள பெரம்பூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இரட்டை இலை சின்னத்தில் போட்டி.. வீடியோ வெளியிட்ட சுந்தர் சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com