பெட்ரோல் நுகர்வு 300 சதவீதம் உயர்வு.. ஹைதராபாத்தில் மக்கள் பீதி?

Fuel Panic Grips South India : ஹைதராபாத்தில் பெட்ரோல் விற்பனை 300 சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளது.

Published on: March 27, 2026 at 11:02 am

Updated on: March 27, 2026 at 11:03 am

ஹைதராபாத், மார்ச் 26, 2026: ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்படுகிறது. பெட்ரோல், டீசல் விற்பனை சாதாரண அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், கருப்பு சந்தையில் எல்பிஜி விலை உயர்ந்து வருகிறது. அரசாங்கம் மீண்டும் மீண்டும் பற்றாக்குறை இல்லை, பொருள்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என உறுதிமொழிகளுக்கு மத்தியிலும், நீண்ட வரிசைகள் குறையவில்லை.

இந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்று பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மீண்டும் தெரிவித்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அடுத்த 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் விநியோகத்தை ஏற்கனவே உறுதி செய்துள்ளன. உலகளாவிய நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவைகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு முழுமையாக பாதுகாப்பாக உள்ளன என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ஆனால், மத்திய கிழக்கு போர் அச்சம், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள், மற்றும் மக்களின் நம்பிக்கை நெருக்கடி — இவை அனைத்தும் ஒன்றாகக் கலந்ததால் பீதி அதிகரித்துள்ளது.

ஹைதராபாத் நிலை

தெலங்கானாவில் ஹைதராபாத் மாநிலத்தில் ஜூபிலி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், அமீர்பேட் பகுதிகளில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. மேலும், போலீசார் பொதுமக்களை அமைதிப்படுத்த அறிவிப்பு அமைப்புகளை பயன்படுத்தினர்.

இதற்கிடையில், தினசரி எரிபொருள் விற்பனை சுமார் 300% அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், பெங்களூருவிலும் பெட்ரோல் பயன்பாடு நுகர்வு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஏப்ரல் 1 முதல் ஏடிஎம் விதிகளில் மாற்றம் – வங்கி வாடிக்கையாளர்கள் நோட் பண்ணுங்க

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com