சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை.. ஷாக் கொடுத்த டிடிவி தினகரன்!

Assembly Election 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை என தெரிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

Published on: March 23, 2026 at 10:03 pm

Updated on: March 23, 2026 at 10:04 pm

சென்னை மார்ச் 23, 2026; 2026 சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

2026 சட்டமன்ற பொது தேர்தல்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற பொது தேர்தலில், ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது; இதில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் மதியத்துக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன். 2026 சட்டமன்ற பொது தேர்தலை, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சந்திக்கிறது. அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இந்த தொகுதிகளில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தி உள்ள டிடிவி தினகரன் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்; இதுகுறித்து பேசிய டிடிவி தினகரன், ” 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; நாங்கள் கேட்டதில் 99.00% கொடுத்துள்ளார்கள். எங்களது கட்சியினர் குக்கர் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர்” என்றார்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகபட்சமாக பாரதிய ஜனதாவுக்கு 27 தொகுதிகள், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன; தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க; ராகுல் காந்தி காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுகிறார்.. காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக்!

ராகுல் காந்தி காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுகிறார்.. காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக்!
M Christopher Tilak

ராகுல் காந்தி காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுகிறார்.. காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com