தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு.. பாமக, டிடிவி தினகரனுக்கு எத்தனை தொகுதிகள்? முழு விவரம்!

Assembly Election 2026: அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Published on: March 23, 2026 at 4:25 pm

Updated on: March 23, 2026 at 5:43 pm

சென்னை மார்ச் 23, 2026; தமிழக சட்டமன்ற தேர்தல், விறுவிறுப்பு கட்டத்தை எட்டி உள்ளது; ஏப்ரல் 23ஆம் தேதி, வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தங்களின் பரப்புரைகளை துரிதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்று, தொகுதிகள் பிரித்து வழங்கப்பட்டன. அதன்படி அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு, பதினோரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலையும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களிடம் டிடிவி தினகரன் அளித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன; காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பாஜக கூட்டணியில் 27 தொகுதிகளை பெற்றுள்ளது.

கடந்த முறை அதிமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட பாஜக நான்கு தொகுதிகள் வரை வெற்றி பெற்றிருந்தது. அந்த தொகுதிகள் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை தெற்கு மற்றும் ஈரோடு மொடக்குறிச்சி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; பட்டியலின விவசாயி படுகொலை.. குற்றவாளி ஏன் கைதாகவில்லை? எடப்பாடி பழனிசாமி கேள்வி

ராகுல் காந்தி காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுகிறார்.. காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக்! M Christopher Tilak

ராகுல் காந்தி காங்கிரஸுக்கு உள்ளேயும் வெளியேயும் போராடுகிறார்.. காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com