எல்லாம் வல்ல இறைவன் அருளால்.. த.வெ.க தலைமையில் ஆட்சி.. இப்தார் நோன்பு விழாவில் விஜய்!

Assembly Election 2026: ” யார் எந்த மாதிரியான அவதூறுகள் பரப்பினாலும் இறைவன் அருளால் நாம் நமது இலக்கை அடைய முடியும் என பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் தான் ஆட்சி என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.

Published on: March 18, 2026 at 9:19 pm

Updated on: March 18, 2026 at 9:20 pm

சென்னை மார்ச் 18, 2026; நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத்தின் நிறுவனர் தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பின் பேசிய கழக நிறுவன தலைவர் விஜய், தமிழக வெற்றி கழகம் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதாக குற்றம் சாட்டினார்.

கூட்டணி குறித்து பொய்யான தகவல்கள்

இது தொடர்பாக பேசிய விஜய், ” நமக்கு எதிராக நமது கூட்டணி குறித்து பொய்யான பரப்புரைகளை செய்து வருகிறார்கள்; நாம் அரசியலுக்கு வந்த நாள் முதல் நம்மைப் பற்றி வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். நம்மைப் பொறுத்தவரை எப்போதும் நாம் மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை; நமது தலைமையில் தான் கூட்டணி என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம்” என்றார்.

இறைவன் அருளால் இலக்கு

மேலும், ” முதலில் தமிழக வெற்றி கழகம் அந்த டீம் என்றார்கள்; பின்னர் தமிழக வெற்றிக் கழகம் இந்த டீம் என்றார்கள். நாம் அவர்கள் கூறிய எந்த டீமும் இல்லை; மக்கள் டீம் என தெரிந்த பின்பு, விஜய் அந்த கூட்டணி, இந்தக் கூட்டணி என பொய்களை பரப்புகிறார்கள்” என்றார். தொடர்ந்து யார் என்ன அவதூறு பரப்பினாலும், எல்லாம் வல்ல இறைவன் அருளால் நாம் நமது இலக்கை அடைய முடியும்” என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார்.

இதையும் படிங்க; இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி குறைப்பு.. மார்க்சிஸ்ட் நிலை என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com