Kangana Ranaut Slams Rahul Gandhi: ராகுல் காந்தி, தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞர் போல் பொறுப்பில்லாமல் பாராளுமன்றத்தில் வலம் வருகிறார் என நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
Kangana Ranaut Slams Rahul Gandhi: ராகுல் காந்தி, தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞர் போல் பொறுப்பில்லாமல் பாராளுமன்றத்தில் வலம் வருகிறார் என நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

Published on: March 18, 2026 at 4:37 pm
புதுடெல்லி, மார்ச் 18, 2026: பாராளுமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி கங்கனா ரணாவத், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை “டப்போரி” (தெருவோர இளைஞன்) என்று குறிப்பிட்டு, அவர் பெண்களுக்கு மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறார் என்று கூறினார்.
84 முன்னாள் அதிகாரிகள், 116 முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் 4 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்ட கடிதத்திற்குப் பிறகு இந்த கருத்து வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், மார்ச் 12 அன்று நடந்த சம்பவத்திற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அன்றைய தினம், பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, ராகுல் காந்தி பாராளுமன்றத்தின் “மகர் த்வார்” நுழைவாயிலில் தனது சகாக்களுடன் தேநீர் அருந்திக்கொண்டும், பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கங்கனா ரணாவத் பேட்டி
#WATCH Delhi: On the letter to the public by 84 former bureaucrats, 116 veterans and former lawyers on Congress MP and LoP Rahul Gandhi, BJP MP Kangana Ranaut says, "…It is very uncomfortable the way he conducts himself, he should see the conduct and behaviour of his sister,… pic.twitter.com/KsFOVeDKGm
— ANI (@ANI) March 18, 2026
(நன்றி: ஏ.என்.ஐ)
இது தொடர்பாக கங்கனா ரணாவத் கூறுகையில், “பெண்கள் அவரைப் (ராகுல் காந்தி) பார்த்தால் மிகவும் அசௌகரியமாக உணர்கிறோம். அவர் ஒருவிதமாக டப்போரி (தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞர்) போல வருகிறார். யாரிடமும் மரியாதையில்லாமல் பேசுகிறார். யாராவது பேட்டி கொடுத்தால், அவர் சப்தம் போடுகிறார்” என்றார்.
மேலும், ராகுல் காந்தி தனது சகோதரி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி வாத்ராவின் நடத்தை, ஒழுக்கத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து, “ராகுல் காந்தி தானே ஒரு அவமானம்,” என்றார்.
இதையும் படிங்க: டெல்லியில் தீ விபத்து.. கட்டடத்தில் சிக்கிய 10 பேரின் நிலை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com