இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி.. தாய்கிழவியை பாராட்டிய கமல்ஹாசன்!

Thaai kelavi Success Meet: ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள தாய்க்கிழவி திரைப்படம் குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கூறிய வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார்.

Published on: March 16, 2026 at 5:01 pm

சென்னை, மார்ச் 16 2026: தமிழ் சினிமாவில் அனுபவம் மிக்க நடிகையான ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தாய்க்கிழவி. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான இந்த படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன்
இந்த படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடந்தது.

இந்த நிகழச்சியில் கலந்துகொண்டு படத்தில் கதாநாயகியான ராதிகா சரத்குமார் பேசியதாவது, இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். ஒரு படம் வெற்றி பெறவில்லை என்றால் அதில் நடித்தவர்களின் நடிப்பு மட்டும் பாராட்டப்படும். ஆனால் படம் வெற்றி பெற்றால் இயக்குநர், தயாரிப்பாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் அது வெற்றியாக மாறும்” என்று கமல் ஹாசன் கூறியதாக தெரிவித்தார்.

அந்த வார்த்தைகள் மிகவும் உண்மையானவை என தாம் எண்ணியதாகவும் ராதிகா கூறினார். ஒவ்வொரு காலத்திலும் புதிய இயக்குநர்கள் தமிழ் சினிமாவை மாற்றியுள்ளனர். அந்த வரிசையில் இந்தப் படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசனும் தனித்துவமான பாணியுடன் செயல்படுகிறார். அவர் அதிகமாக பேசாதவராக இருந்தாலும் ஆழமான சிந்தனையுடன் பணியாற்றும் இயக்குநர் என்று சிவகுமார் முருகேசனை ராதிகா பாராட்டினார்.

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஹன்சிகா மோத்வானி விவாகரத்துக்கு என்ன காரணம்.. வைரலாகும் போஸ்ட்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com