Hansika’s Ex-Sister-in-Law’s Cryptic Post: ஹன்சிகா மோத்வானியின் முன்னாள் மைத்துனி, சோஹேல் கத்தூரியாவுடன் விவாகரத்துக்குப் பிறகு மர்மமான பதிவை பகிர்ந்துள்ளார்.
September 16, 2026
Hansika’s Ex-Sister-in-Law’s Cryptic Post: ஹன்சிகா மோத்வானியின் முன்னாள் மைத்துனி, சோஹேல் கத்தூரியாவுடன் விவாகரத்துக்குப் பிறகு மர்மமான பதிவை பகிர்ந்துள்ளார்.

Published on: March 16, 2026 at 1:24 pm
மும்பை, மார்ச் 16, 2026: தொழிலதிபர் சோஹேல் கத்தூரியாவுடன் திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் கூட கடக்காத நிலையில், நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில், ஹன்சிகாவின் முன்னாள் மைத்துனியும் நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ், இதற்கு மறைமுகமாகப் பதிலளித்ததாகத் தெரிகிறது. இது குறித்து அவர் சமூக வலைதளத்தில், “முழுமையாக போலியான உலகம்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ““நீ எப்போதும் ஆதரவாகவும் புரிந்துகொள்ளக் கூடியவராகவும் இருந்தாய்; அதற்கு நான் உண்மையிலேயே நன்றி கூறுகிறேன். தயவுசெய்து என்னை ஒருவரின் ‘முழுமையாக போலியான உலகத்துடன்’ இணைக்க வேண்டாம். எனக்கு ‘Paid PR’ இல்லை — உண்மையை காலமே வெளிப்படுத்தும். ‘சப் சமய்கா கேல் ஹை’ (அது எல்லாம் காலத்தின் விளையாட்டு). அமைதி, அன்பு & கர்மா.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கும்பமேளா வைரல் பெண்ணுடன் திருமணம்.. யார் இந்த ஃபர்மான் கான்?
கடந்த கால தகராறு
இதற்கிடையில், கடந்த ஆண்டு செப்டம்பரில், ஹன்சிகா சந்தித்த சட்ட சிக்கல்கள் மேலும் வெளிச்சத்துக்கு வந்தன. மும்பை உயர்நீதிமன்றம், அவரது மைத்துனியும் நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ் (அவர் ஹன்சிகாவின் சகோதரர் பிரஷாந்த் மோட்வானியை திருமணம் செய்தவர்) தாக்கல் செய்த புகார் மனு மீதான எஃப்.ஐ.ஆர்.-ஐ ரத்து செய்ய மறுத்துவிட்டது.
அதாவது, ஹன்சிகா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த எஃப்.ஐ.ஆர்.-இல் ஹன்சிகா மற்றும் அவரது தாய் ஜ்யோதி (மோனா என்றும் அழைக்கப்படுகிறார்) மீது கொடுமை மற்றும் பிற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: இளம் நடிகைகளுக்கு சவால் விடும் மலாய்கா அரோரா.. வயது என்ன தெரியுமா?
CM Vijay: முதலமைச்சர் விஜயின் லண்டன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Anbil Mahesh Poyyamozhi: தமிழகத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCB) சோதனை நடத்தியது.
Rentomojo IPO: ரென்டோமோஜோ IPO பங்குகள் ஒதுக்கீடு செப்டம்பர் 15, 2026 அன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. IPO 72.88 மடங்கு சந்தாதாரர்களால் பதிவு செய்யப்பட்ட நிலையில், பங்குகள் செப்டம்பர் 17, 2026 அன்று தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
A. Raja: வழக்கறிஞர் கார்த்தி அளித்த புகாரின் பேரில், ஏழு பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது சைதாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
Bajaj: பஜாஜ் ஹோல்டிங்ஸ் & இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் 2026-27 நிதியாண்டுக்கான முதல் இடைக்கால லாபப்பங்காக ரூ.65 ஒவ்வொரு பங்குக்கும் அறிவித்துள்ளது.
Unemployment rate in India: இந்தியாவின் வேலைவாய்ப்பு தரவுகள் படி, ஆகஸ்ட் 2026-இல் வேலைஇல்லா விகிதம் 5% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்ததால், வேலைஇல்லா விகிதம் 7 மாதங்களில் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.
UPI money transaction: அக்டோபர் 15, 2026 முதல் ரூ.2,000-ஐ மீறும் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR (Merchant Discount Rate) வசூலிக்கப்படும். ரூ.75,000-ஐ மீறும் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 வரை மட்டுமே கட்டணம் விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Sasikanth: தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளதால் தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Aswathaman: முதலமைச்சர் விஜய் அஜித் குமார் சந்திப்பு பார்க்க நன்றாக இருந்தது; முதலமைச்சர் விஜய் தனது சொந்த பணத்தில் லண்டன் சென்றாரா என பாஜகவில் அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பி உள்ளார்.
Special Buses: விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தங்களது ஊருக்கு சென்ற தென் மாவட்ட மக்கள் திரும்பி சென்னை வரும் வகையில், அதற்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com