Malaika Arora: 52 வயதில் மலாய்கா அரோரா, மும்பையில் நடைபெற்ற கிரிதிகா காம்ரா மற்றும் கவுரவ் கபூரின் திருமணத்திற்குப் பிந்தைய விருந்தில் வெள்ளி நிற ஆடையுடன் தனது கவர்ச்சிகரமான தோற்றத்தில் கலந்துகொண்டார்.
Malaika Arora: 52 வயதில் மலாய்கா அரோரா, மும்பையில் நடைபெற்ற கிரிதிகா காம்ரா மற்றும் கவுரவ் கபூரின் திருமணத்திற்குப் பிந்தைய விருந்தில் வெள்ளி நிற ஆடையுடன் தனது கவர்ச்சிகரமான தோற்றத்தில் கலந்துகொண்டார்.

Published on: March 16, 2026 at 12:48 pm
மும்பை, மார்ச் 16, 2026: மும்பையில் நடைபெற்ற கிரிதிகா காம்ரா மற்றும் கவுரவ் கபூரின் திருமணத்திற்குப் பிந்தைய விருந்தில் மலாய்கா அரோரா (52) வெள்ளி நிற ஆடையுடன் தனது கவர்ச்சிகரமான தோற்றத்தில் கலந்துகொண்டார். இந்தத் திருமணம், மார்ச் 12ஆம் தேதியன்று நடந்தது.
கவர்ச்சி தோற்றத்தில் மலாய்கா அரோரா
திருமணத்திற்குப் பிந்தைய விருந்தில், மலாய்கா அரோரா கவர்ச்சிகரமான சீக்வின் எம்பிராய்டரியால் அலங்கரிக்கப்பட்ட அழகிய வெள்ளி நிற ஆடையை அணிந்திருந்தார். இது, டிஸ்கோ பால் காலத்தை நினைவூட்டும் தோற்றத்தை அளித்தது.
இதையும் படிங்க: ஆஸ்கார் விழாவில் பரபரப்பு.. உயிர் தப்பிய பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ்!
மேலும், இந்த விருந்தில் சூடான கவர்ச்சியை கூட்டும் வகையில், அவர் ஸ்ட்ராப் இல்லாத வடிவமைப்புடன், ஆழமான கழுத்து வடிவம், உடலை அணைக்கும் பொருத்தம், தரையைத் தொட்ட நீளத்துடன் கூடிய ஆடையைத் தேர்ந்தெடுத்து இருந்தார். இது அவருக்கு கனகச்சிதமாக பொருந்தி இருந்தது.
மேலும், மலாய்கா, அந்த ஆடையை கிரிஸ்டல்கள் மற்றும் மாணிக்கங்களால் அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான சங்கிலியுடன் இணைத்தார். மேலும், அலங்கரிக்கப்பட்ட பம்ப்ஸ், ஸ்டைலிஷ் கைக்கடிகாரம், கிரிஸ்டல்களால் அலங்கரிக்கப்பட்ட கருப்பு கிளட்ச் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து தனது தோற்றத்தை முழுமைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கும்பமேளா வைரல் பெண்ணுடன் திருமணம்.. யார் இந்த ஃபர்மான் கான்?
Iyarkai : ‘நான்சி, கேப்டனே வந்து உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நான் விரும்பினது விரும்புனத தான்; இந்த மோதிரம் இதனால் வரைக்கும் அவன் ஞாபகம், என் உயிரைக் கொடுத்து எடுத்து இருக்கேன். இன்னைல இருந்து இது ஏன் ஞாபகம்’ என நடிகர் ஷாம் பேசும் காட்சிகள் இன்றளவும் பலருக்கும் ஃபேவரைட். உங்களது மனதில் கையை வைத்து சொல்லுங்கள் யாருக்கெல்லாம் இந்த இயற்கை திரைப்படம் பிடிக்கும்?
Crocodile Rescue: குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, வீட்டின் குளியலறைக்குள் புகுந்த 7 அடி நீள முதலை வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இயற்கை குளத்தில் விடப்பட்டது.
Mekedatu Row: மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக தொடரும் என்றும், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க உச்சநீதிமன்றமே ஒரே வழி என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com