Iran Israel War: ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல நிரந்தர ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Iran Israel War: ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல நிரந்தர ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Published on: March 16, 2026 at 2:20 pm
புதுடெல்லி, மார்ச் 16 2026: இந்தியா– ஈரான் நாடுகளுக்கு இடையில் ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல பொதுவான அல்லது நிரந்தர ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பைனான்சியல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக் கடந்து செல்வதற்கு ஒவ்வொரு முறையும் தனித்தனியாக ஆலோசித்து தீர்மானிக்கப்படுவதாக கூறினார். “அனைத்து கப்பல்களும் சுதந்திரமாக செல்லும் வகையில் முன்கூட்டியே பொதுவான ஏற்பாடு எதுவும் இல்லை” என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியா, ஈரான் நாட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முயற்சி செய்து வருவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
சமீபத்தில் இந்தியாவுக்குச் செல்லும் எல்.பி.ஜி. கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்க ஈரான் அனுமதி வழங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதைத் தொடர்ந்து பேசிய அவர், அது குறிப்பிட்ட சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட ஏற்பாடாகும் என்றும் கூறினார்.
மேலும், உலகின் முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் பெரும் பகுதி நடைபெறுகிறது. எனவே அந்தப் பகுதியின் நிலைமை உலக பொருளாதாரத்திற்கும் ஆற்றல் பாதுகாப்பிற்கும் முக்கியமானதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஆற்றல் தேவைகளை கருத்தில் கொண்டு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்க தேவையான அனைத்து தூதரக முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அஸ்ஸாம்.. தேர்தல், வாக்கு எண்ணிக்கை.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com