Oil Surges to $105 Amid US-Israel War: அமெரிக்கா- ஈரானுக்கு எதிரான போர் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை $105.15 ஆக உயர்ந்துள்ளது.
Oil Surges to $105 Amid US-Israel War: அமெரிக்கா- ஈரானுக்கு எதிரான போர் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், ஒரு பீப்பாய் எண்ணெய் விலை $105.15 ஆக உயர்ந்துள்ளது.

Published on: March 16, 2026 at 2:27 pm
மும்பை, மார்ச் 16, 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வார இறுதியில் ஈரானின் இராணுவ இலக்குகளைத் தாக்கிய பின்னர், ஈரானின் கார்க் தீவு எண்ணெய் ஏற்றுமதி மையத்தை மேலும் தாக்குவதாக எச்சரித்தார். இதற்கு பதிலளித்த ஈரான், மேலும் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் – ஈரானுக்கு எதிரான போர் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது. இதற்கிடையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை $105.15 ஆக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
முன்னதாக, பிரெண்ட் க்ரூட் ஃப்யூச்சர்ஸ் $2.01 (1.95%) உயர்ந்து, ஒரு பீப்பாய் $105.15 ஆக 2338 ஜி.எம்.டி.,யில் சென்றது. ஆக, வெள்ளிக்கிழமை $2.68 உயர்ந்து வர்த்தகம் முடிந்தது. அதே நேரத்தில், அமெரிக்கா வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் க்ரூட் $1.61 (1.63%) உயர்ந்து, ஒரு பீப்பாய் $100.32 ஆனது. முந்தைய அமர்வில் சுமார் $3 உயர்ந்திருந்தது.
இதையும் படிங்க: 2026ல் டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், டெக் பங்குகள் தொடர் சரிவு.. ஏ.ஐ காரணமா?
ஆக, இந்த மாதம் 40% க்கும் மேல் உயர்ந்து, 2022-க்கு பிறகு மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளன. அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தியது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் ஐந்தில் ஒரு பங்கு இங்கு கடந்து செல்கிறது.
கச்சா எண்ணெய் கையிருப்பு
இதற்கிடையில், “400 மில்லியன் பீப்பாய் எண்ணெய் கையிருப்புகள் விரைவில் சந்தைக்கு வெளியிடப்பட உள்ளன. இது மத்திய கிழக்கு போரால் ஏற்பட்ட விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் வரலாற்றுச் சாதனையான நடவடிக்கை” என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: முதலீடுக்கு 15.56% வருமானம்.. SBI பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீஸ் ஃபண்ட் எப்படி?
Women’s Nations Hockey Cup: இந்திய மகளிர் ஹாக்கி அணி, நியூசிலாந்து ஆக்லாந்தில் நடைபெற்ற FIH ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கப் போட்டியில் ஜப்பானை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
Shruti Haasan : வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதாவது ஒரு பாடம் கிடைக்கிறது என்றும், கடினமான நாட்கள்கூட நமக்கு முக்கியமான அனுபவங்களை கற்றுத்தரும் நல்ல நாட்கள்தான் என்றும் நடிகை ஸ்ருதிஹாநள் தெரிவித்துள்ளார்.
SP’s Surprise Raid in Chengalpattu : செங்கல்பட்டில் மாவட்ட எஸ்பி ஐமன் ஜமால் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com