விஜய்யிடம் சிபிஐ விசாரணை.. TVK யாருடன் கூட்டணி?

Assembly Election 2026: நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜயிடம், சிபிஐ அதிகாரிகள் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேலாக இன்று விசாரணை நடத்தினார்கள்.

Published on: March 15, 2026 at 7:56 pm

புதுடெல்லி, மார்ச் 15 2026; நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், 2025 செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று கரூரில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்; இந்தப் பொதுக்கூட்டத்தில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என 41 பேர் தங்களின் இன்னுயிரை இழந்தார்கள்; மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதில் காயம் அடைந்தார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய புலனாய்வு குழு (சிபிஐ), வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது; இந்த வழக்கு தொடர்பாக புதுடெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் ஏற்கனவே ஜனவரி மாதம் இருமுறை ஆஜராகி உள்ளார்.

அப்போது சிபிஐ தரப்பில் வெளியான அறிக்கையில், நடிகர் விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சில கேள்விகள் கேட்கப்பட்டன; அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த தேவை ஏற்பட்டால் அதன் பெயரில் நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிஐ தரப்பில் நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் புதுடெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மார்ச் 15ஆம் தேதி நடிகர் விஜய் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நடிகர் விஜய் ஆஜர்

இதைத்தொடர்ந்து பொது டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஜரானார். அவரிடம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்த தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின் போது, விஜய் இடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

யாருடன் கூட்டணி?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது; அதன்படி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல், வருகிற ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸும் அதிமுக கூட்டணியில் பாஜகவும் அங்கம் வகிக்கின்றன. நாம் தமிழர் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை விஜய் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க; தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு.. காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அதிருப்தி!

எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும்.. இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்கும் திமுக.. மு.க ஸ்டாலின் பரபரப்பு பேச்சு! MK Stalin

எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும்.. இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்கும் திமுக.. மு.க ஸ்டாலின்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com