Chinmayi: ஞானபீட விருது பெற்ற பின் வைரமுத்துவை பாராட்டிய கமல்ஹாசனை, #MeToo குற்றச்சாட்டில் சிக்கியவரை ஆதரித்ததாக சின்மயி ஸ்ரிபாதா கடுமையாக விமர்சித்தார்.
Chinmayi: ஞானபீட விருது பெற்ற பின் வைரமுத்துவை பாராட்டிய கமல்ஹாசனை, #MeToo குற்றச்சாட்டில் சிக்கியவரை ஆதரித்ததாக சின்மயி ஸ்ரிபாதா கடுமையாக விமர்சித்தார்.

Published on: March 14, 2026 at 10:11 pm
சென்னை, மார்ச் 14 2026:பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டதை, பாடகி சின்மயி ஸ்ரிபாதா கடுமையாக எதிர்த்தார். தனது கோபத்தை வெளிப்படுத்த அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், #MeToo குற்றச்சாட்டில் சிக்கியவரை ஆதரித்து பாராட்டுபவர்களையும் அவர் கண்டித்தார். 2018 ஆம் ஆண்டு, சின்மயி, வைரமுத்து தன்னை பாலியல் தொல்லை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து சின்மயி ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “அய்யோ!.. சினிமாவில் அதிகாரம் பெற்ற ஆண்கள் அரசியலுக்கு மாறும்போது, ‘அவரது மாமா-ஆசான்’ பெண்களை பாலியல் தொல்லை செய்ததாக வெளிப்படையாகச் சொன்ன பெண்களின் குரல்களை முற்றிலும் புறக்கணிப்பது, வாக்களிக்கும் பெண்களுக்கு நினைவூட்ட வேண்டும் – ஆண்கள் எப்போதும் எங்கள் பக்கம் இருக்கமாட்டார்கள்.
அதிசயமான விஷயம் என்னவென்றால் – அவருடைய சொந்தக் கட்சியில் இருந்த ஒரு பெண் கூட அந்தக் கவிஞரை வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.
இறுதியில், ஆண்கள் எப்போதும் தங்கள் சகோதரர்கள், மாமாக்கள், தந்தைகள், நண்பர்கள், ஆசான்கள் ஆகியோரின் பக்கம் நிற்பார்கள். பல பெண்கள் மன உளைச்சலுக்கு உள்ளானாலும், யாரும் கவலைப்படுவதில்லை” என்ன குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் கவிஞர் வைரமுத்துக்கு ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவிட்ட நிலையில், அதற்கு பாடகி சின்மயி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ஞானபீட விருது
இன்று, ஜெயகாந்தன் போன்றவருக்குப் பிறகு, அந்த மனிதருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது. கேரளக் குழு, அவருக்கு ஓ.என்.வி. குருப் விருதை அறிவித்தது. ஆனால், சமூகத்தில் நீதியின் குரல்கள் எழுந்தபோது, ஸ்ரீ ஓ.என்.வி. குருப் அவர்களின் பெயரை களங்கப்படுத்தக் கூடாது என்று கூறி அந்த விருது ‘திருப்பி’ அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; ஆஸ்கார் நட்சத்திர விருந்து.. ஸ்டைலிஷ் தோற்றத்தில் பிரியங்கா- நிக் ஜோனாஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com