Vijay Sethupathi: நான் தயாரித்த பெரும்பாலான திரைப்படங்கள் நஷ்டம் தான் என கூறியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி
Vijay Sethupathi: நான் தயாரித்த பெரும்பாலான திரைப்படங்கள் நஷ்டம் தான் என கூறியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி

Published on: March 14, 2026 at 8:55 pm
சென்னை மார்ச் 14 2026; தற்போது காட்டான் என்ற தொடரை தயாரித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, ” தாம் தயாரித்த பெரும்பாலான திரைப்படங்கள் நஷ்டத்தில்தான் முடிந்தன” என கூறினார் இதுகுறித்து பேசிய அவர், “நான் தயாரித்த பல படங்கள் நஷ்டம் தான்; நான் தயாரித்த பெரும்பாலான படங்கள் எனக்கு நஷ்டமாகவே முடிந்துள்ளன
என் தயாரிப்பில் சங்கு தேவன் என்ற படத்தை எடுத்தோம். ஆனால் அந்த படம் வெளியீடு ஆகாமல் நிறுத்தப்பட்டதால் சுமார் 1.75 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது அதற்குப் பிறகு நான் தயாரித்த ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடர்ச்சி மலை, ஜுங்கா லாபம் ஆகிய படங்களும் வர்த்தக ரீதியாக நஷ்டமாகவே முடிந்தது.
காட்டான் பற்றி
இருப்பினும், அந்தப் படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தவை என்பதால் எந்த வருத்தமும் இல்லை” என்றார் “தற்போது காட்டான் என்ற தொடரை நான் தயாரித்துள்ளேன். இந்த தொடருக்கான நிதியை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வழங்கியுள்ளது” என்றும் அவர் கூறினார்
இதையும் படிங்க; கடற்கரை வியூ.. பிரம்மாண்ட பங்களா.. சான்யா மல்ஹோத்ரா வீட்டில் கிரகப்பிரவேசம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com