Food: ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா சட் என்று செய்யலாம் சுவையான கோஸ் வடை.
Food: ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா சட் என்று செய்யலாம் சுவையான கோஸ் வடை.

Published on: March 14, 2026 at 10:01 am
சென்னை, மார்ச் 14, 2026: ஈவினிங் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய மொறுமொறுப்பான கோஸ்வடை வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 1 கப்
கோஸ் (பொடியாக நறுக்கியது) 1 கப்
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் -2 கறிவேப்பிலை – சிறிதளவு
சீரகம்- ½ டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் உளுத்தம் பருப்பை இரண்டு மூன்று முறை நீரில் சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து எடுக்கவும். பின்னர் இதனுடன் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சற்று மெல்லிய வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுத்தால் சுவையான கோஸ் வடை ரெடி.
இதையும் படிங்க; காரசாரமான பேபி கார்ன் மிளகு கறி.. இப்படி ட்ரை பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com