CBSE: மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
CBSE: மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Published on: March 6, 2026 at 1:53 pm
Updated on: March 6, 2026 at 1:54 pm
புதுடெல்லி, மார்ச் 6, 2026: மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் மார்ச் மாதம் 7 முதல் 11 வரை நடைபெறவிருந்த 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 2, 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த 10ஆம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் 10ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகள் எவ்வாறு அறிவிக்கப்படும் என்பது பின்னர் தனியாக அறிவிக்கப்படும் எனவும் சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. அதாவது, மார்ச் 7ஆம் தேதி நடைபெறவிருந்த 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.
மார்ச் 9ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள தேர்வுகள் குறித்து நாளை (சனிக்கிழமை) நிலைமையை ஆய்வு செய்து, தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5, 2026 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, இந்த முடிவு பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய நாடுகளில் உள்ள CBSE-யுடன் இணைந்த பள்ளிகளை பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கனடாவில் உயர் கல்வி.. 100 மில்லியன் டாலர் நிதியுதவி.. இந்தத் திட்டம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com