Manickam Thakur: தேர்தல் என்று வரும்போது நாங்களும் தியாகம் செய்ய வேண்டும், திமுகவும் தியாகம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
Manickam Thakur: தேர்தல் என்று வரும்போது நாங்களும் தியாகம் செய்ய வேண்டும், திமுகவும் தியாகம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

Published on: March 5, 2026 at 6:19 pm
சென்னை, மார்ச் 5, 2026: ‘தேர்தல் என்று வரும்போது நாங்களும் தியாகம் செய்ய வேண்டும், திமுகவும் தியாகம் செய்ய வேண்டும்” என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர், “திமுகவும் காங்கிரசும் வேற வேற கட்சிகள்; கொள்கைகளும் கோரிக்கைகளும் வேற வேற” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தேர்தல் என்று வரும்போது நாங்களும் தியாகம் செய்ய வேண்டும், திமுகவும் தியாகம் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ள அவர், “கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் தியாகம் செய்ய வேண்டும்; எல்லோரும் தியாகம் செய்தால்தான் கூட்டணியை உருவாக்க முடியும்” எனவும் விருதுநகரில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. முன்னதாக மாணிக்கம் தாகூர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றார். இந்தக் கோரிக்கையை தி.மு.க.வினர் நிராகரித்தனர்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்றார். இதற்கிடையில், காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணிக்கம் தாகூர் எம்.பி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தி.மு.க கூட்டணி உடையாதா என ஏக்கம்? மு.க ஸ்டாலின்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com