Andhra fire accident: ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Andhra fire accident: ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: February 28, 2026 at 6:48 pm
காக்கிநாடா, பிப். 28 2026: ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் வெட்லபாலம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது இந்த ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களின் உடல் சிதறி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் 21 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரண பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தாங்கள் ஆதரவளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா வந்தார் கனடா பிரதமர்.. திங்கள்கிழமை மோடியுடன் சந்திப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com