Visit Malaysia Year 2026.. இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தும் மலேசியா!

Visit Malaysia year 2026: 2025-ல் மலேசியாவுக்கு 42.2 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்; இதில் 1.6 மில்லியன் பேர் இந்தியாவிலிருந்து சென்றுள்ளனர்.

Published on: February 24, 2026 at 7:02 pm

Updated on: February 24, 2026 at 7:03 pm

புதுடெல்லி, பிப்.24, 2026: இந்தியாவுடன் உறவை வலுப்படுத்தும் சுற்றுலா மலேசியா தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, புதுடெல்லியில் நடைபெற்றது. அப்போது பேசிய மலேசிய சுற்றுலா தலைவர் தாதுக் மனோகரன் பெரியசாமி, “மலேசிய சுற்றுலா சந்தையில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “2025-ல் மலேசியாவுக்கு 42.2 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்; இதில் 1.6 மில்லியன் பேர் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். இது இரு நாடுகளுக்கிடையேயான வலுவான உறவையும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையையும் காட்டுகிறது” என்றார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் மலேசிய தூதர் டாடோ முஷாபர் ஷா முஸ்தபா, “மலேசியாவில் இந்தியர்கள், பொழுதுபோக்கு, திருமணங்கள் மற்றும் பிரீமிய பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது இந்தியர்களின் உறுதியான சுற்றுலா வளர்ச்சியை காட்டுகின்றது.
இந்த நிலையில், விசா-இலவச நுழைவு, அதிகரித்த விமான இணைப்புகள், வலுவான தொழில் கூட்டாண்மைகள் காரணமாக இது 2026-ல் மேலும் வளர்ச்சியை உறுதி செய்யும்” என்றார்.

மலேசிய சுற்றுலா மேம்பாடு

மலேசிய சுற்றுலா மேம்பாட்டு வாரியம், அந்நாட்டின் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் ஆகும். இது, மலேசியாவை உலகின் விரும்பத்தக்க சுற்றுலா இடமாக விளம்பரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில் விசிட் மலேசியா 2026 (Visit Malaysia 2026 -VM2026) திட்டம், ஐ.நா. நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்து, மலேசியாவின் நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.
இந்த முயற்சி, நாட்டின் இயற்கை வளங்கள், பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் பல்வகை சுற்றுலா வாய்ப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதோடு, உள்ளூர் சமூகங்களுக்கும் தொழில் பங்குதாரர்களுக்கும் நீண்டகால மதிப்பை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் ரூ.1500 கோடி திட்டங்கள்.. நாட்டின் அடையாளம் தமிழர்கள் ஞானம்.. சர்பானந்த சோனோவால்!

தூத்துக்குடியில் ரூ.1500 கோடி திட்டங்கள்.. நாட்டின் அடையாளம் தமிழர்கள் ஞானம்.. சர்பானந்த சோனோவால்! Sarbananda Sonowal

தூத்துக்குடியில் ரூ.1500 கோடி திட்டங்கள்.. நாட்டின் அடையாளம் தமிழர்கள் ஞானம்.. சர்பானந்த சோனோவால்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com