Saqlain Mushtaq: தென் ஆப்பிரிக்கா அணியுடனான இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
Saqlain Mushtaq: தென் ஆப்பிரிக்கா அணியுடனான இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.

Published on: February 23, 2026 at 4:26 pm
இஸ்லாமாபாத், பிப்.23, 2026: அகமதாபாத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 188 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 111 ரன்களுக்கு சுருண்டது. இது இந்தியாவின் டி-20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆஃப்ஸ்பின்னர் சாக்லைன் முஷ்தாக், சூர்யகுமார் யாதவின் அணியை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறுகையில், “தென் ஆப்பிரிக்காவின் அனைத்து திட்டங்களும் இன்று வேலை செய்தன. அவர்கள் இந்தியர்களை தரையில் இழுத்து அடித்தனர், அவமானப்படுத்தினர். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் — மூன்று துறைகளிலும் அவர்கள் திட்டமிட்ட ஆட்டம் சிறப்பாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷொயப் அக்தர், “இந்திய பேட்ஸ்மேன்கள் “ஹார்திக் பாண்ட்யா, சிவம் துபே மற்றும் ஸ்பின்னர்கள் அழுத்தத்தை தாங்க முடியவில்லை. இந்திய பேட்டிங் அழுத்தத்தில் வெளிப்படையாக பலவீனமாகியது. ஹார்திக் பாண்ட்யா 20வது ஓவருக்கு சரியான தேர்வு அல்ல.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்கா உடனான தோல்விக்கு கௌதம் கம்பீர் காரணமா? வெடிக்கும் சர்ச்சை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com