FD Rates: மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன.
FD Rates: மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன.

Published on: February 20, 2026 at 10:17 pm
சென்னை, பிப்.20, 2026: கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கியின் 125 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதக் குறைப்புக்குப் பிறகு நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் குறைந்திருக்கலாம். இதற்கிடையில், மூத்த குடிமக்கள் பிப்ரவரி 2026 இல் இன்னும் 7.75% வரை சம்பாதிக்கலாம்.
இந்த நிலையில், 5 முன்னணி தனியார் வங்கிகள் வழங்கும் மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
| வ.எண் | வங்கி | மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் |
| 01 | யெஸ் வங்கி | 7.75 சதவீதம் |
| 02 | இண்டஸ்இந்த் வங்கி | 7.50 சதவீதம் |
| 03 | ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி | 7.50 சதவீதம் |
| 04 | ஆர்.பி.எல் வங்கி | 7.70 சதவீதம் |
| 05 | பந்தன் வங்கி | 7.70 சதவீதம் |
தனியார் வங்கிகளில், யெஸ் வங்கி தற்போது மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. பந்தன் வங்கி மற்றும் RBL வங்கி ஆகியவை 7.70% வட்டி விகிதத்துடன் மிக அருகில் உள்ளன.
பொதுத்துறை வங்கிகள்
| வ.எண் | வங்கி | மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் |
| 01 | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா | 6.70 சதவீதம் |
| 02 | பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா | 6.70 சதவீதம் |
| 03 | சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா | 6.75 சதவீதம் |
| 04 | பஞ்சாப் நேஷனல் வங்கி | 6.90 சதவீதம் |
| 05 | பேங்க் ஆஃப் பரோடா | 7.00 சதவீதம் |
பொதுத்துறை வங்கிகளில், பேங்க் ஆஃப் பரோடா 7.00% உடன் முன்னிலை வகிக்கிறது, அதைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி 6.90% உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோதிலால் ஓஸ்வால் vs ஹெச்.டி.எஃப்.சி நிதி.. பெஸ்ட் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் எது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com