Udhayanidhi Stalin: தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க வந்தது தங்களுக்கு கூடுதல் பலம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Udhayanidhi Stalin: தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க வந்தது தங்களுக்கு கூடுதல் பலம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: February 20, 2026 at 12:32 pm
சென்னை, பிப்.20, 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பாண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் ஓரணியாகவும், அ.தி.மு.க, பா.ஜ.க எதிரணியாகவும் சந்திக்கிறது.
இதற்கிடையில் சீமானின் நாம் தமிழர் கட்சி ஓரணியாகவும், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஓரணியாகவும் தேர்தலை எதிர்கொள்கின்றன.
இதனால் வழக்கத்துக்கு மாறாக தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தே.மு.தி.க, தி.மு.க.வுடன் கூட்டணியை வியாழக்கிழமை (பிப்.19, 2026) இறுதி செய்தது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் பேசகையில், “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது எங்களுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும்” என்றார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கண்டிப்பாக பலவீனமாகத்தான் அமையும்; எங்கள் பலத்தை அறிந்து தொடர்ந்து பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டணியில் இணைந்து கொண்டுதான் வருகிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க: விஜய்- காங்கிரஸ் கூட்டணி? பைத்தியக்காரத்தனம்.. பாதாளத்திற்கு செல்வோம்.. மணிசங்கர் ஐயர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com