கணவரின் அனுமதி இன்றி உறவினர் வீட்டுக்கு சென்றால் 3 மாதம் சிறை.. ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்!

Afghanistan: ஆப்கானிஸ்தான் நாட்டில் 90 பக்கம் கொண்ட புதிய தண்டனைச்சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தாலிபான் அரசு. இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: February 20, 2026 at 12:07 pm

Updated on: February 20, 2026 at 12:19 pm

காபூல், பிப்.20, 2026: ஆப்கானிஸ்தானில் 90 பக்கம் கொண்ட புதிய தண்டனைச்சட்டத்தை தாலிபான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், “குடும்ப சண்டையின் போது மனைவி மற்றும் குழந்தைகளை ஆண்கள் உடல் ரீதியாக அடிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “எனினும், எலும்புகள் உடையும் அளவிற்கோ, திறந்தவெளி காயங்கள் ஏற்படும் அளவிற்கோ தாக்கக் கூடாது” எனவும் கருணைக் காட்டப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

15 நாள்கள் சிறை

தொடர்ந்து, “ஒருவேளை மனைவியை அடித்ததில் அவருக்கு கண்ணுக்கு தெரியும் படியான காயங்கள் ஏற்பட்டிருந்தால் கணவனுக்கு 15 நாள்கள் மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சற்று ஆறுதலாக விஷயம் ஆகும்.

இதையும் படிங்க: சீனாவில் பட்டாசு வெடிப்பு விபத்து.. 12 பேர் உயிரிழப்பு!

பெண்களுக்கு 3 மாதம் சிறை

இதற்கிடையில், “கணவரின் அனுமதி இல்லாமல் உறவினர் வீட்டிற்கு மனைவி சென்றால் அந்த பெண்ணிற்கு மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” எனவும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் உருவாக்கியுள்ள சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதில், “தனக்கு எதிராக துன்புறுத்தல் நடைபெற்றது பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள் கவலை

இதற்கிடையில், புதிய 90 பக்க தண்டனை சட்டம் அந்நாட்டு பெண்களின் அடிப்படை சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கியிருப்பது தான் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எப்ஸ்டீன் தொடர்பு.. இங்கிலாந்து முன்னாள் இளவரசர் கைது.. பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com