AR Rahman: நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவில் பாடலில் பங்களிப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் ரூ.2 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
AR Rahman: நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவில் பாடலில் பங்களிப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் ரூ.2 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Published on: February 14, 2026 at 1:21 pm
புதுடெல்லி, பிப்.14, 2026: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பொன்னியின் செல்வன் II படத்தின் வீர ராஜ வீரா பாடலில், கலைஞர் ஃபையாஷ் வாஷிஃதீன் தாகர் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. அப்போது, இவ்விவகாரம் சட்ட ரீதியான உரிமைகள் மட்டுமல்ல, அங்கீகாரம் மற்றும் மரியாதை குறிப்பது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், “சில அங்கீகாரம் இருக்க வேண்டும். அவர்கள் பாரம்பரிய சங்கீத வழிபாட்டாளர்கள். போட்டித் துறையில் இல்லை. அவர்களுக்கு மரியாதையும் அங்கீகாரமும் வேண்டும்,” என்று நீதிமன்றம் தெரிவித்தது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மல்யா பாக்சி இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது, “தாகர் பாரம்பரியத்தின் பங்களிப்பு சாஸ்திரிய சங்கீதத்திற்கு மிக முக்கியமானது. பங்களிக்கவில்லை என்றால், இன்றைய பாடகர்கள் இவ்வளவு சாதிக்க முடியுமா?” என்றார்கள்.
இதையும் படிங்க: 20 நிமிட உடற்பயிற்சி.. 50 வயதில் 25 வயது இளமை.. நடிகை ஜெனிஃபர் ஃபிட்னெஸ் சீக்ரெட்!
பொன்னியின் செல்வன் படத்தில் வரும் வீர ராஜ வீரா பாடல் நாசிர் ஃபயாசுதீனின் சிவ சுத்தியில் இருந்து நகலெடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாடல் வரிகள் வேறுபட்டாலும், தாளம், லயம், இசை அமைப்பு ஒரே மாதிரியாக உள்ளதாக புகார்தாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
எனினும் ரஹ்மானின் வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். அப்போது, “வீர ராஜ வீரா என்ற பாடல் மேற்கத்திய இசை கூறுகள் கொண்டு உருவாக்கப்பட்ட அசல் படைப்பு என்றார்.
ரூ.2 கோடி டெபாசிட்
முன்னதாக இந்த வழக்கில் இசைக்கலைஞருக்கு உரிய கிரெடிட் மற்றும் ரூ.2 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தற்போது ஆதரித்துள்ளது.
ஆகவே, வழக்கு தீர்வு வரும் வரை ஏ.ஆர். ரஹ்மான் அந்த தொகையை வைப்பு செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 20-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்னை யாரும் கொல்லப் போவதில்லை.. ஆனாலும் பாதுகாவலர்கள் ஏன்? பிரியங்கா சோப்ரா விளக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com