Asian Rifle and Pistol Championship: ஆசிய ரைஃபிள் மற்றும் பிஸ்டல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஈஷா சிங் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
Asian Rifle and Pistol Championship: ஆசிய ரைஃபிள் மற்றும் பிஸ்டல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஈஷா சிங் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

Published on: February 5, 2026 at 1:39 pm
புதுடெல்லி, பிப்.5, 2026: டெல்லி, டாக்டர் கர்ணி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் நடைபெற்ற ஆசிய ரைஃபிள் மற்றும் பிஸ்டல் சாம்பியன்ஷிப் தொடக்க நாளில், ஒலிம்பியன் ஈஷா சிங் பெண்கள் தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
21 வயதான ஈஷா சிங், பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேறி 239.8 புள்ளிகள் பெற்று, தனது இரண்டாவது தனிநபர் ஆசிய சாம்பியன்ஷிப் தங்கத்தை கைப்பற்றினார். சீன தைவான் வீராங்கனைகள் செங் யென் (235.4 புள்ளிகள் – வெள்ளி) மற்றும் யூ ஐ-வென் (217.7 புள்ளிகள் – வெண்கலம்) ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளினார்.
இதையும் படிங்க: U-19 ஒருநாள் உலகக் கோப்பை.. இறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து பலப்பரீட்சை!
குழு போட்டி
ஈஷா சிங், ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கர், மற்றும் சுருசி சிங் ஆகியோர் இணைந்து பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிப் பிரிவில் 1,726 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றனர்.
இந்த நிலையில், வியட்நாம் வீராங்கனை வெள்ளியையும், தைவான் வீராங்கனை வெண்கல பதக்கத்தையும் பெற்றார்.
ஆண்கள் பிரிவு
உலக சாம்பியன் சம்ராட் ராணா, ஆண்கள் தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதியில் வெண்கலப் பதக்கம் பெற்றார். இந்த வெற்றிகள், இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் புதிய பெருமையை சேர்த்துள்ளன.
இதையும் படிங்க: பிக் பாஸ் பிரபலத்துடன் ஹோட்டலில் யுஸ்வேந்திர சஹால்.. மீண்டும் கிசுகிசு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com