புதுச்சேரியில், காங்கிரசுக்கு அழைப்பில்லை.. திமுக கூட்டணி கூட்டத்தில் சலசலப்பு!

DMK Alliance Meet in Puducherry: புதுச்சேரியில் திமுக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை; அதே நேரம் மற்ற கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Published on: February 3, 2026 at 4:36 pm

புதுச்சேரி பிப்ரவரி 3, 2026; புதுச்சேரியில் நடைபெற்ற திமுக கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது; இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான நாராயணசாமி, ” புதுச்சேரியில் திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது; இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை” என்றார்.

புதுச்சேரியில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், திமுக கூட்டணி பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அதே நேரம் இக்கூட்டத்தில், தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் கலந்து கொண்டன.

காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படாதது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் சலசலப்புகள் நிலவுவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன.
இந்த நிலையில் புதுச்சேரியிலும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளது தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் அதிமுக, திமுக, நாம் தமிழர் மற்றும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் திமுக கூட்டணியிலும் பாரதிய ஜனதா அதிமுக கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் தரப்பு மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை; இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க; புழல்- தாம்பரம் சாலையில் ஆட்டோ ரேஸ்.. 3 ஆட்டோ, 3 பைக் பறிமுதல்.. 11பேரை தட்டித் தூக்கிய போலீஸ்

நெருப்பு டா.. நெருங்கு டா.. துருவ் விக்ரம் படம்.. இசை யார் தெரியுமா? Dhruv Vikram

நெருப்பு டா.. நெருங்கு டா.. துருவ் விக்ரம் படம்.. இசை யார் தெரியுமா?

Dhruv Vikram: நடிகர் துருவ் விக்ரம் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் சிவன் இசையமைக்கவுள்ளார்….

அதிதி- அர்ஜூன் தாஸ் ரொமாண்டிக் லவ் ஸ்டோரி.. ஒன்ஸ்மோர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! Once More

அதிதி- அர்ஜூன் தாஸ் ரொமாண்டிக் லவ் ஸ்டோரி.. ஒன்ஸ்மோர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Once More: ‘ஒன்ஸ் மோர்’ ஆகஸ்ட் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்….

52வது வயதில் கஜோல்.. வெண்ணிலவே வெண்ணிலவே.! Kajol

52வது வயதில் கஜோல்.. வெண்ணிலவே வெண்ணிலவே.!

Kajol: 52வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகை கஜோல். ஆடம்பரமான கொண்டாட்டங்களை விட குடும்பத்தினருடன் செலவிடும் நேரம்தான் சிறந்தது என்கிறார்….

தயாரிப்பாளராக களமிறங்கும் ஷாலினி.. ஏகே 64 படத்தின் டைட்டில் வெளியீடு! AK64 Titled Dare Devil

தயாரிப்பாளராக களமிறங்கும் ஷாலினி.. ஏகே 64 படத்தின் டைட்டில் வெளியீடு!

AK64 Titled Dare Devil: நடிகர் அஜித் குமார் நடிக்கும் 64-வது திரைப்படத்திற்கு ‘Dare Devil’ என அதிகாரப்பூர்வமாக பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது….

‘கோச்சடையான்’ AI பதிப்புக்கு நீதிமன்றம் பச்சைக்கொடி! தடை கோரிய மனு தள்ளுபடி Kochadaiiyaan AI Re-release

‘கோச்சடையான்’ AI பதிப்புக்கு நீதிமன்றம் பச்சைக்கொடி! தடை கோரிய மனு தள்ளுபடி

Kochadaiiyaan AI Re-release : ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தின் AI தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட பதிப்பை மீண்டும் வெளியிடத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 2014…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com