புதுடெல்லி, பிப்.3, 2026: மக்களவையில், பரபரப்பான சூழ்நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள்:
1) குர்ஜீத் ஆஜ்லா
2) ஹிபி ஈடன்
3) மணிக்கம் தாகூர்
4) பிரஷாந்த் யடோராவ் படோலே
5) கிரண் குமார் ரெட்டி
6) டீன் குரியாகோஸ்
7) அமரிந்தர் சிங் ராஜா வாரிங்
8) எஸ். வெங்கடேசன்
இந்த நடவடிக்கை, மக்களவையில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பும் குழப்பமும் காரணமாக எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது, “எனக்கு பேச அனுமதி தரவில்லை; பிரதமர் மோடி பயப்படுகிறார். நான்கு மாதங்களாக நின்றிருந்த வர்த்தக ஒப்பந்தம், நேற்று மாலை திடீரென கையெழுத்திடப்பட்டுள்ளது.
பிரதமருக்கு மிகுந்த அழுத்தம் உள்ளது; ₹1,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ‘இமேஜ் பலூன்’ உடைந்து போகலாம். பிரதமர் மோடி சமரசம் செய்யப்பட்டுள்ளார். யார், எப்படி சமரசம் செய்தார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்” என்றார்.
மேலும் ராகுல் காந்தி, பிரதமரின் தனிப்பட்ட நம்பகத்தன்மை மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்.
வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தனிப்பட்ட புகழ் உருவாக்கம் குறித்து விமர்சனம் செய்தார். இந்த நிலையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனியுரிமை தகவலை நாகரீகமாக திருடும் வாட்ஸ்அப்.. உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
BRICS 2026: 2026 பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய சாதனைகள் மற்றும் இனி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து பார்க்கலாம்….
New Uniforms for Tasmac Employees: டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய சீருடை திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. மேலும், ஊழியர்களுக்கு முன்பணமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட உள்ளது….
Rain Alert: தமிழ்நாட்டில் செப்.21ஆம் தேதி திங்கள்கிழமை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….
C.D. Nirmal Kumar: தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் பதிலளித்தார்….
Manju Warrier: நடிகை மஞ்சு வாரியரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், திரைப்பட இயக்குநர் சனல் குமார் சசிதரன் உள்ளிட்டோருக்கு எதிராக மஞ்சு வாரியர் வழக்கு தொடர்ந்துள்ளார்….
T20I Rankings: டி20 சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்