கூந்தல் கருகருவென வளரணுமா? இந்தப் பச்சை காய்கறி சாப்பிடுங்க.. கரீனா கபூர் ஊட்டச்சத்து நிபுணர்!

Hair growth: கரீனா கபூரின் ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர், தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ‘ரகசிய’ பச்சை காய்கறிகள் குறித்து பேசியுள்ளார்.

Published on: January 19, 2026 at 7:17 pm

Updated on: January 19, 2026 at 7:51 pm

சென்னை, ஜன.19, 2026: இன்றைய காலகட்டத்தில் தலைமுடி உதிர்தல் மற்றும் முன்கூட்டியே வெள்ளையாகும் பிரச்சினையை பலரும் எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், இந்தப் பிரச்னையை குறைக்க உதவும் டிப்ஸ் ஒன்றை கரீனா கபூரின் ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் பகிர்ந்துள்ளார். அதாவது, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A, C, மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுப் பொருள்கள் உணவில் அதிகம் எடுத்துக்கொண்டால் இந்தப் பிரச்னையை குறைக்க உதவும் என்கிறார்.

ருஜுதா திவேகர் கூறும் ரகசியம் — ஷேப்பு (Dill leaves)ஆகும். அதாவது, இந்த எளிய பச்சை காய்கறி தான் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், “ஷேப்புவை சாப்பிடுங்கள். இது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அதிகம் காட்டப்படாத பச்சை காய்கறி. இந்தியாவில், குறிப்பாக பிரசவத்திற்குப் பிறகு பராமரிப்பில், நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய உணவு இது. தேவையான அனைத்தும் ரீல்ஸில் கிடைக்காது, வயல்களில் தான் கிடைக்கும். தொழில்நுட்பத்தில் மூழ்காமல், பண்ணைகளுடன் இணைந்திடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஷேப்புவின் நன்மைகள்

போஷகச் சக்தி: ஃபிளேவனாய்ட்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்தது.
தலைமுடி ஆரோக்கியம்: முடி உதிர்தல் மற்றும் சேதத்தைத் தடுக்கும்.
மனஅழுத்தம் குறைப்பு: மன அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தை மேம்படுத்துகிறது.
ஆற்றல் & சக்தி: சோர்வை குறைத்து, உடல் உற்சாகத்தை அதிகரிக்கிறது.
மொத்த ஆரோக்கியம்: உடல் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, முழுமையான நலனைக் கொடுக்கும்.

இதையும் படிங்க: சாரே, ஒரு கட்டன் காபி.. ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறும் 3 நன்மைகள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com