Jananayagan film case: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது; இந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கில் ஜனவரி ஒன்பதாம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
Jananayagan film case: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது; இந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கில் ஜனவரி ஒன்பதாம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

Published on: January 7, 2026 at 9:24 pm
சென்னை, ஜனவரி 7 2026: தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது; இந்தத் திரைப்படத்தை பிரபல இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்துள்ளார்.
இப்படத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் தொடர்பான சில காட்சிகளும் இருக்கலாம் எனவும் இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவத் கேசரி என்ற திரைப்படத்தின் தழுவல் எனவும் இரு வேறுபட்ட கருத்துக்கள் உலாவுகின்றன.
எனினும் ஜனநாயகன் திரைப்படத்தை கொண்டாடி தீர்க்க அவரது ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர்; பலரும் தாங்கள் ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்க ஆவலாக உள்ளோம் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு இன்னமும் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் ஜனவரி ஒன்பதாம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
மேலும் ஜனவரி ஒன்பதாம் தேதி திரைப்படம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது; அன்றைய தினம் காலை 10 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில், படத்தின் காலை காட்சிகள் நடைபெறாது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், அன்றைய தினம் தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டு படம் வெளியாகும். அதே நேரம், படத் தரப்பு, மேல் முறையீட்டுக்கு சென்றால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் நேரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புஷ்பா-2 சாதனையை முறியடித்த துரந்தர்.. இந்தி பட வரலாற்றில் புதிய சாதனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com