அஸ்ஸாமில் அதிகாலையில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி

Earthquake in Assam: அஸ்ஸாமில் இன்று (ஜன.5, 2025) அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.

Published on: January 5, 2026 at 11:39 am

கெளஹாத்தி, ஜன.5, 2026: அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று அதிகாலை 4:17 மணிக்கு, நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், அஸ்ஸாம் மாநிலத்தின் மத்திய பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் பதிவனது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி மொரிகாவோன் மாவட்டத்திற்கு அருகில், 50 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது என புவியியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நிலநடுக்கமானது மொரிகாவோன் மற்றும் அருகிலுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த மத்திய அஸ்ஸாம் பகுதிகளிலும் உணரப்பட்டன.
இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளிலிருந்து வெளியேறினர். எனினும், உயிரிழப்பு அல்லது பிற சொத்துகளுக்கு சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை.

இந்த நிலநடுக்க அதிர்வுகள் அண்டை நாடுகளான பூடான், நேபாளம் மற்றும் வங்கதேசத்திலும் உணரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சீனாவை முந்திய இந்தியா.. அரிசி உற்பத்தியில் புதிய சாதனை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com