Vladimir Putin: ரஷ்ய அதிபர் புதின் அரசு முறைப் பயணமாக இன்று (டிச.4, 2025) வருகிறார்.
Vladimir Putin: ரஷ்ய அதிபர் புதின் அரசு முறைப் பயணமாக இன்று (டிச.4, 2025) வருகிறார்.

Published on: December 4, 2025 at 10:08 am
புதுடெல்லி, டிச.4, 2025: ரஷ்யா, உக்ரைன் நாடு மீது படையெடுத்த பிறகு முதல் முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (வியாழக்கிழமை) இந்தியாவிற்கு வருகை தருகிறார். 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டிற்காக புதின் வியாழக்கிழமை மாலை டெல்லி வருகிறார். இதற்கிடையில், புடினின் இரண்டு நாள் பயணத்தின் போது நடைபெறும் பேச்சுவார்த்தைகள் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவது, வர்த்தகம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதினுக்கு விருந்து அளிக்கிறார் மோடி
புதினின் இந்தியப் பயண நிகழ்ச்சி நிரலில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுடனான சந்திப்பு, டெல்லி வந்த சிறிது நேரத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி ஏற்பாடு செய்த தனிப்பட்ட இரவு உணவு ஆகியவை காணப்படுகிறது.
மேலும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு, புதுமையான தொழில்நுட்பங்கள், போக்குவரத்து, அமைதியான விண்வெளி ஆய்வு, சுரங்கம், சுகாதாரம் மற்றும் தொழிலாளர் இடம்பெயர்வுத் திட்டங்கள் ஆகியவற்றில் பேச்சுவார்த்தைகளிலும் புதின் கலந்துகொள்கிறார்.
இந்தத் தகவலை புடினின் உதவியாளர் யூரி உஷாகோவ் உறுதிப்படுத்தினார். மேலும், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு அரசியல் உரையாடல் “வழக்கமான மற்றும் ரகசியமாக” உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு.. அல் ஃபலாஹ் பல்கலைக்கழக நிறுவனர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com