Haryana | டெல்லியின் அருகாமை மாநிலமான ஹரியானாவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை காங்கிரஸூம், ஆம் ஆத்மியுடம் கூட்டணி அமைத்து சந்திக்கும் எனத் தெரிகிறது.
Haryana | டெல்லியின் அருகாமை மாநிலமான ஹரியானாவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை காங்கிரஸூம், ஆம் ஆத்மியுடம் கூட்டணி அமைத்து சந்திக்கும் எனத் தெரிகிறது.
Published on: September 4, 2024 at 10:04 pm
Haryana | ஹரியானா சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸூம் ஆம் ஆத்மியும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.
டெல்லியை ஒட்டியுள்ள ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியும் ஒரளவு வளர்ந்துள்ளது. இந்தக் கட்சிக்கு இங்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. எனினும் தற்போதுவரை தொகுதி பங்கீடு இறுதிச் செய்யப்படவில்லை.
இங்கு ஆம் ஆத்மி கட்சி 10 தொகுதிகளை கேட்கிறது. ஆனால் காங்கிரஸ் 7 தொகுதிதான் தருவேன் என வாதிடுகிறது. இதனால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் தேர்தல்; ராகுல் கொடுத்த வாக்குறுதி என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com