DK Veeramani: தமிழ்நாட்டில், பிஜேபி மற்றும் சங் பரிவாரங்களின் பருப்பு ஒருநாளும் வேகாது என காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
DK Veeramani: தமிழ்நாட்டில், பிஜேபி மற்றும் சங் பரிவாரங்களின் பருப்பு ஒருநாளும் வேகாது என காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
Published on: June 24, 2025 at 3:36 pm
சென்னை, ஜூன் 24 2025: மதுரை முருகர் மாநாட்டில் திராவிடர் கழகத்தின் நிறுவனர் பெரியார் மற்றும் தி.மு.க நிறுவனர் சி.என் அண்ணாத்துரை ஆகியோர் அவமதிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் பி.ஜே.பி., சங் பரிவார் காவிகள் கர்ணக் குட்டிக்கரணம் அடித்தாலும் பருப்பு ஒருபோதும் வேகாது” எனத் தெரிவித்துள்ளார்.
பெரியார் என்னும் மாபெரும் மனுஷன்
தொடர்ந்து, “பெரியார் என்ற ஒரு மாபெரும் மனுஷன் மக்களிடத்திலே மகத்தான மாற்றத்தை ஏற்படுத்திவிட்டார். சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டு மக்கள் மத்தியிலே மதத்துக்கு எதிராகவும், கடவுளுக்கு எதிராகவும், சாஸ்திரங்களுக்கு எதிராகவும் புயல் வேகத்தில் எடுத்துச் சொல்லிச் சொல்லி, மக்களை மடைமாற்றம் செய்துவிட்டார்கள்.
அதற்கு எதிராகவெல்லாம் நம் ஜம்பம் எடுபடாது; நாமும் பல தேர்தல்களைச் சந்தித்துப் பார்த்துவிட்டோம்! விழி பிதுங்கி தோல்வி மூட்டைகளைச் சுமந்து முதுகெலும்பு முறிந்ததுதான் மிச்சம்! வேறு வழியில்லை; வடக்கே ராமனைக் காட்டி மக்களின் மதி மயக்கத்தை அறுவடை செய்ததுபோல, தமிழ்நாட்டிலும் முயற்சித்துப் பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க மீது கடும் தாக்கு
மேலும், “பா.ஜ.க.வுக்கு அடமானம் வைக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் இருந்து ‘‘அண்ணா’’வின் பெயரையும், ‘‘திராவிட’’ என்ற பண்பாட்டு அடையாள வரலாற்றையும் அறவே நீக்கிவிட்டு, ‘‘அமித்ஷா மு(பி)ன்னேற்றக் கழகம்’’ என்று பெயர் சூட்டிக் கொள்வது உத்தமமானது” எனவும் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஊர்க்காவல் படையினருக்கு ஊதிய உயர்வு; பணி நிரந்தரம்.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com