A woman was hit by a speeding car: சாலையில் நடந்து சென்ற பெண்ணை கார் தூக்கி வீசிய சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
A woman was hit by a speeding car: சாலையில் நடந்து சென்ற பெண்ணை கார் தூக்கி வீசிய சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: May 2, 2025 at 7:24 pm
திருவனந்தபுரம், மே 2 2025: சாலையில் நடந்து சென்ற பெண் மீது கார் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியில் 2025 ஏப்ரல் 26ஆம் தேதி நடந்துள்ளது.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஸ்வகதமடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சாலையில் நடந்து சென்ற பெண்ணை கார் தூக்கி வீசிய சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#accident #thiruvananthapuram #malappuram #kerala #ShockingVideo pic.twitter.com/LH88Vwo5Tk
— Dravidan Times (@DravidanTimes) May 2, 2025
மேலும், இந்தச் சம்பவம் மக்கள் குடியிருப்பு பகுதி அருகில் நடந்துள்ளது. சாலை ஓரத்தில் குழந்தையுடன் நடந்து சென்ற 33 வயதான பதாரியா என்ற பெண் மீது கார் மோதியுள்ளது. தற்போது கோட்டக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் பதாரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது சி.சி.டி.வி காட்சியில் கூட பார்க்க முடியும்.
இதையும் படிங்க : போலீஸ் அதிகாரியை அடிக்க பாய்ந்த சித்த ராமையா.. காங்கிரஸ் போராட்டத்தில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com