நடிகை சமந்தா சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? ஒரு படத்திற்கு சம்பளம் எவ்வளவு?

Actress Samanthas 38th Birthday: நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை சமந்தா இன்று (ஏப்ரல் 28 2025) தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Published on: April 28, 2025 at 5:05 pm

ஹைதராபாத் ஏப்ரல் 28 2025: தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா 28ஆம் தேதி ஏப்ரல் மாதம் 1987ல் பிறந்தார். அந்த வகையில் அவர் இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமந்தாவைப் பொறுத்தவரை அவரது நடிப்பில் வெளியான நான் ஈ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ராஜமவுலி இயக்கி இருந்த இந்த படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்திருப்பார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடிகர் விஜய், தனுஷ், சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர்களான மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் உடன் நடித்தார். மேலும் புஷ்பா பாகம் ஒன்று திரைப்படத்தில் வெளியான ஒரு பாடலுக்கும் கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அந்த வகையில் நடிகை சமந்தா விடம் ₹101 கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஹைதராபாத்தில் உள்ள நடிகை சமந்தாவின் இல்லம் மட்டும் ரூபாய் ஏழு கோடி எனவும் கூறப்படுகிறது.
சமந்தா ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூபாய் மூன்று கோடி முதல் ரூபாய் 8 கோடி வரை சம்பளம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் அண்மையில் வெளியான வெப் சீரிஸ் தொடருக்காக நடிகை சமந்தா ரூபாய் 10 கோடி சம்பளமாக பெற்றார் எனவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகை சமந்தாவுக்கு மும்பையில் ஒரு வீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை சமந்தா 38 வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சமந்தா திருமண முடிவுக்கு பிறகு, ‘மையோசிடிஸ்’ என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் கணவர் வீட்டில் கொடுத்த ஜீவனாம்சத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகின. மேலும் மேற்கூறிய நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமானது அல்ல. தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூரி vs சந்தானம் vs யோகி பாபு: ரேஸில் முந்தப்போவது யார்? பரபரக்கும் கோடம்பாக்கம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com