Director K Bhagyaraj: “நான் நடிகை நமீதாவின் தீவிர ரசிகன்; எனக்கு பிடித்த காட்சி இதுதான்” என பட விழா ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார் இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜ்.
Director K Bhagyaraj: “நான் நடிகை நமீதாவின் தீவிர ரசிகன்; எனக்கு பிடித்த காட்சி இதுதான்” என பட விழா ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார் இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜ்.
Published on: April 26, 2025 at 11:50 am
சென்னை ஏப்ரல் 26 2025: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளம் வந்தவர் நடிகர் பாக்யராஜ். இவரின் படங்களுக்கு இன்றளவும் ரசிகர் பட்டாலும் உள்ளது. கே பாக்யராஜை பொருத்தமட்டில் அவரது படத்தில் திரைக்கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் வசனங்களும் காட்சிகளும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
இந்த நிலையில் நடிகை தேவயானி நடித்துள்ள நிழல்குடை படத்தின் விழா ஒன்றில் பேசினார். அப்போது தான் நடிகை நமீதாவின் தீவிர ரசிகன் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய கே பாக்யராஜ் நான் இந்த விழாவில் கலந்து கொண்ட போது நடிகை நமீதாவும் என் மகன் சாந்தனுவும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து அன்பை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர்.
என்னைப் பார்த்ததும் சாந்தனு திரு திருவென விழிக்கிறான்; இப்படி ஒரு காட்சியை இனி பார்க்க முடியுமா? என்றார்.
‘தேவயானி கணவர் ராஜகுமாரன்தான்’
தொடர்ந்து நடிகர் கே பாக்யராஜ் என்னை பொருத்தவரை ஆளுமை பேச்சு என்றால் அது சீமான் தான் என அவருக்கு புகழாரம் சூட்டினார். தொடர்ந்து நடிகை தேவயானிக்கு தான் ரசிகன் என ஒப்புக்கொண்ட கே. பாக்கியராஜ் அவரை ‘ராஜகுமாரன்’ கொத்திக் கொண்டு சென்று விட்டார்” என்றார். நடிகை தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்.. இசையமைக்கிறார் ஏ.ஆர் ரகுமான்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com