Ganesh chaturthi special trains | வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்திய ரயில்வே மும்பையில் இருந்து கொங்கனுக்கு 342 சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Ganesh chaturthi special trains | வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்திய ரயில்வே மும்பையில் இருந்து கொங்கனுக்கு 342 சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
Published on: September 1, 2024 at 11:54 am
Ganesh chaturthi special trains | செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்திய ரயில்வே மும்பையில் இருந்து கொங்கனுக்கு 342 சிறப்பு ரயில்களை இயக்குவதாக இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
300 கொங்கன் ரயில்களுக்கான தேவை இருந்த நிலையில், இந்திய அரசு விநாயகர் சதுர்த்தியின்போது, 342 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதனை மும்பையில் உள்ள பாந்த்ரா டெர்மினஸ் மற்றும் கோவாவின் மட்கான் இடையே வாராந்திர இருமுறை ரயிலின் தொடக்க விழாவின்போது இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் பத்து நாள் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, ஒவ்வொரு ஆண்டும் மும்பையிலிருந்து கொங்கனில் உள்ள தங்கள் சொந்த இடங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மும்பையின் மேற்கு புறநகர் பகுதிகளுக்கும் கடலோர கொங்கன் பகுதிக்கும் இடையே நேரடி இணைப்பை வழங்கும் மும்பை-கொங்கன் நேரடி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மகாராஷ்டிராவில் ரயில்வே நெட்வொர்க் மேம்பாட்டிற்கு 2014ஆம் ஆண்டுக்கு முன் ரூ.1,171 கோடியாக இருந்த பட்ஜெட் ஒதுக்கீடு, 2024-25ஆம் ஆண்டில் 13 மடங்கு அதிகமாக ரூ.15,940 கோடியாக உயர்த்தப்பட்டது.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் 1,830 கிமீ புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன, இது இலங்கையின் முழு ரயில் வலையமைப்பை விடவும் அதிகம்.
மும்பையில் உள்ள சின்னமான சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸின் (CSMT) திட்டமிட்ட மறுவடிவமைப்பு, சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட மற்றும் பார்வையிடப்பட்ட இடமாக மாறும் என்றார்.
மகாராஷ்டிராவில் தற்போது 5,600 கோடி ரூபாய் செலவில் 318 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க சென்னை-நாகர்கோவில், மதுரை- பெங்களூரு: வந்தே பாரத் ரயில் இன்று தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com