Pakistan invites PM Narendra Modi | பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அக்டோபரில் நடைபெறும் எஸ்.சி.ஓ மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
Pakistan invites PM Narendra Modi | பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அக்டோபரில் நடைபெறும் எஸ்.சி.ஓ மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
Published on: August 30, 2024 at 6:16 pm
Pakistan invites PM Narendra Modi | பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அக்டோபரில் நடைபெறும் எஸ்.சி.ஓ மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
அக்டோபர் மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் அழைத்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மும்தாஸ் சஹ்ரா பலோச், “அக்டோபர் 15-16 தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், இந்தியாவுடனான உறவுகள் தொடர்பான கேள்விக்கு, “பாகிஸ்தானுக்கு இந்தியாவுடன் நேரடி இருதரப்பு வர்த்தகம் இல்லை” என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இஸ்லாமாபாத் உச்சிமாநாடு கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர்கள் கூட்டம் மற்றும் SCO உறுப்பு நாடுகளிடையே நிதி, பொருளாதார, சமூக-கலாச்சார மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட பல சுற்று மூத்த அதிகாரிகளின் சந்திப்புகள் நடைபெறும்.
இந்தக் குழுவில், இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க குழந்தை, பலதாரமணம் தடை? அஸ்ஸாம் புதிய இஸ்லாமிய சட்டம் கூறுவது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com