Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (ஆக.30, 2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
February 18, 2026
Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (ஆக.30, 2024) வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

Published on: August 30, 2024 at 5:53 pm
Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 83.95 புள்ளிகள் அல்லது 0.33% அதிகரித்து 25,235.90 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 231.17 புள்ளிகள் அல்லது 0.28% உயர்ந்து 82,365.78 ஆகவும் காணப்பட்டது.
பெரும்பாலும், பரந்த குறியீடுகள் பச்சை நிறத்தில் முடிவடைந்தன. லார்ஜ்கேப் மற்றும் மிட்-கேப் பங்குகளின் லாபத்துடன் காணப்பட்டன.
வங்கி நிஃப்டி குறியீடு 198.25 புள்ளிகள் அல்லது 0.39% உயர்ந்து 51,351-ல் முடிந்தது. பார்மா மற்றும் ரியாலிட்டி பங்குகள் சிறப்பாக செயல்பட்டன.
ஸ்பைஸ்ஜெட் 6% வீழ்ச்சி
ஸ்பைஸ்ஜெட் பங்குகள் இன்ட்ராடே டிரேடிங்கில் 6% வரை சரிந்து, பிஎஸ்இயில் 5.48% குறைந்து ரூ.62.60க்கு வர்த்தகமானது.
பங்குகள் நிலவரம்
சிப்லா, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டிவிஸ் லேப்ஸ் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகியவை என்எஸ்இ நிஃப்டி 50 குறியீட்டில் முன்னணி உயர்வில் காணப்பட்டன.
மறுபுறம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, டெக் மஹிந்திரா மற்றும் கோல் இந்தியா போன்ற நிறுவனங்கள் பின்தங்கிய நிலையில் இருந்தன
இதையும் படிங்க செப்டம்பரில் தங்கம், வெள்ளி விலை குறையுமா? சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com