அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் இஸ்லாமிய திருமண பதிவுச் சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.
அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் இஸ்லாமிய திருமண பதிவுச் சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.
Published on: August 29, 2024 at 9:08 pm
Assam |“இது, டீன் ஏஜ் கர்ப்பத்திற்கு எதிரான கடுமையான தடுப்பாக செயல்படும் என்றும், பெண்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் என்றும்” முதலமைச்சர் பிஸ்வா சர்மா கூறினார்.
அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் இன்று (ஆக.29, 2024) இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளுக்கான கட்டாயப் பதிவு மசோதாவை நிறைவேற்றப்பட்டது. 1935 ஆம் ஆண்டின் முந்தைய சட்டத்தை மாற்றும் இந்த மசோதா, மாநிலத்தில் திருமணங்களை கட்டுப்படுத்த புதிய முறைமையை அமல்படுத்துகிறது.
இது குறித்து பேசிய அஸ்ஸாம் முதல் அமைச்சர் பிஸ்வா சர்மா, “இந்தச் சட்டம், அரசு மூலம் திருமணங்களை பதிவு செய்ய கட்டாயமாக்கிறது. பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயது 18 மற்றும் ஆண்களுக்கு 21 ஆண்டுகள் என்பதை நிர்ணயிக்கிறது.
இது, டீன் ஏஜ் கர்ப்பத்திற்கு எதிரான கடுமையான தடுப்பாக செயல்படும் என்றும், பெண்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தும்” என்றார்.
தொடர்ந்து, “இந்த மசோதா மற்றும் குழந்தை திருமணங்களைத் தடுக்கும் என்றும் கூறிய சர்மா, சட்டத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
மேலும், ‘இது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது மற்றும் எங்கள் பெண்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்கும் வழிமுறை ஆகும்” என்றார்.
Constructive feedback from the Opposition is essential to the functioning of a democracy and we at BJP are all ears to feedback we receive to give more teeth to our legislations.#AssamLegislativeAssembly pic.twitter.com/zzWGmn0AHI
— Himanta Biswa Sarma (@himantabiswa) August 29, 2024
மசோதாவின் நோக்கம்:
இந்த மசோதா, மதகுருமார்கள் வழியாக நடைபெறும் முஸ்லீம் திருமணங்களைப் பதிவேற்றுவதற்கான பழமையான முறையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய மசோதா மூலம், அனைத்து திருமணங்களும் அரசிடம் பதிவு செய்யப்படும்.
மசோதாவின் முக்கிய நோக்கங்கள்:
குழந்தை திருமணங்களைத் தடுப்பது
அனுமதியின்றி திருமணங்களை தடுப்பது
பலதார மணத்தை சரிபார்ப்பது
மணமகன் வீட்டில் பெண்ணுக்கு பாதுகாப்பு
அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் அமலுக்கு வரும் இந்த மசோதா, பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் மற்றும் குழந்தை திருமணங்களை தடுக்கும் புதிய வழிமுறைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க இந்திரா காந்தி சோசியலிஸ்ட் அல்ல; ராகுல் குழப்பவாதி: கங்கனா ரணாவத்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com