Aamir Khan’s daughter Ira Khan:பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி வரும் நிலையில், அவரது மகள் ஈரா கான் கண்கலங்கியபடி காரில் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Aamir Khan’s daughter Ira Khan:பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி வரும் நிலையில், அவரது மகள் ஈரா கான் கண்கலங்கியபடி காரில் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Published on: March 18, 2025 at 8:48 pm
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமீர்கான் ரீனா தத் மற்றும் கிரண் ராவ் என இருவரை ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்தும் செய்து விட்டார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது புதிய காதலியை அனைவருக்கும் அறிமுகம் செய்தார். ஆறு வயது குழந்தைக்கு அம்மாவான கௌரிஸ் ஸ்பிராட் என்பவரை தான் கடந்த 18 மாதங்களாக காதலித்து வந்துள்ளதாகவும் விரைவில் இவர்களுக்கு இவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்களது மூன்றாவது திருமணம் விரைவில் நடைபெற உள்ளநிலையில் அமீர்கானின் மகள் ஈரா கான் அழுது கொண்டே காரில் போகும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நுபுர் ஷிகாரே என்பருடன் அமீர்கானின் மகள் ஈரா கான் பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகரமாக நடைபெற்றது. இந்நிலையில் இவர் சோகமான முகத்துடன் அப்பாவை சந்தித்து விட்டு செல்லும் புகைப்படங்களை பார்த்து திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனையா அல்லது வேறு ஏதும் காரணமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க சினிமாவில் எப்படிப்பட்ட கதைகள் மக்களின் மனதைக் கவரும் தெரியுமா? மனம் திறந்து பேசிய கே. பாக்யராஜ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com