Stuart MacGill Convicted In Cocaine Case: கோகோயின் வழக்கில் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டார்.
Stuart MacGill Convicted In Cocaine Case: கோகோயின் வழக்கில் ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டார்.
Published on: March 15, 2025 at 2:40 pm
கான்பெரா, மார்ச் 15, 2025: ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில் கோகோயின் ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாகக் அந்நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், பெரிய அளவிலான போதைப்பொருள் விநியோகத்தில் பங்கேற்றார் என்ற வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அந்த வகையில், 2021 ஏப்ரலில் AUD 330,000 போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார் என்ற வழக்கில் இருந்து 54 வயதான லெக் ஸ்பின்னரை சிட்னி மாவட்ட நீதிமன்ற நடுவர் மன்றம் விடுவித்தது.
இருப்பினும், போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் மெக்கில் விளையாடியுள்ளார். இதற்கிடையில், அவரது தண்டனை குறித்த விசாரணை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது மெக் “சிறிதளவு உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை” என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: Champions Trophy 2025: விராத் கோலி முதல் ரோகித் வரை.. இந்தியர்களின் ஆட்டம் எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com