Chinese apps are back in India: முன்னர் தடை செய்யப்பட்ட 36 சீன செயலிகள் இந்தியாவில் மீண்டும் வந்துள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செயலிகளில் சின்ன சின்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
Chinese apps are back in India: முன்னர் தடை செய்யப்பட்ட 36 சீன செயலிகள் இந்தியாவில் மீண்டும் வந்துள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செயலிகளில் சின்ன சின்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
Published on: February 12, 2025 at 12:05 pm
இந்தியாவில், 2020ல் பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் தரவு தனியுரிமை குறித்த கவலைகள் காரணமாக சுமார் 267 சீன செயலிகள் தடை செய்யப்பட்டன.
கால்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்த எல்லைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தச் செயலிகள் தடை செய்யப்பட்டன.
இந்த நிலையில், 2025ல் இந்த செயலிகளில் பல, அவற்றின் அசல் வடிவத்தில் இருந்து மாறுவேடமிட்டு மீண்டும் வந்துள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, முன்னர் தடைசெய்யப்பட்ட செயலிகளில் குறைந்தது 36 செயலிகள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் கிடைக்கின்றன.
இவற்றில் சில அவற்றின் அசல் அடையாளத்தைத் தக்கவைத்துள்ளன. மற்றவை பிராண்டிங், லோகோ அல்லது உரிமை விவரங்களில் சிறிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன.
மேலும், இந்தப் செயலிகள் கேமிங், ஷாப்பிங், பொழுதுபோக்கு, கோப்பு பகிர்வு மற்றும் உள்ளடக்க உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்தவை ஆகும்.
இந்த செயலிகளில் சில அவற்றின் அசல் சீன டெவலப்பர்களால் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. மேலும், இந்திய சந்தையில் மீண்டும் நுழைய வெவ்வேறு வழிகளை கையாளுகின்றன.
அந்த வகையில், தடைசெய்யப்பட்ட பல சீன செயலிகள் புதிய பெயர்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பதிப்புகளில் இந்தியாவிற்கு மீண்டும் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.20 போதும்.. உங்கள் சிம் கார்டுகள் டிஆக்டிவேட் ஆகாமல் தடுப்பது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com