மனைவியுடன் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மனைவியுடன் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
Published on: February 12, 2025 at 12:14 pm
ஒரு ஆணுக்கும் அவரது வயது வந்த மனைவிக்கும் இடையே இயற்கைக்கு மாறான உடலுறவு தண்டனைக்கு தகுதியற்றது என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதால் மனைவி இறந்தது தொடர்பான வழக்கை நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்றைய தினம், மனைவியின் ஆசன வாயில் அவர் உடலுறவு கொள்ள முயற்சித்துள்ளார்.
மேலும், தனது கைகளையும் பயன்படுத்தியுள்ளார். இதனால் வலியில் துடித்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த இயற்கைக்கு மாறான உடலுறவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, பெரிட்டோனிடிஸ் மற்றும் மலக்குடல் துளை இருப்பதாக மருத்துவர்கள் தங்களது அறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், எந்தவொரு பாலியல் உடலுறவு அல்லது பாலியல் செயலையும் எந்த சூழ்நிலையிலும் பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது எனக் கூறியுள்ளது.
இதன்மூலம், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி) பிரிவு 376 இன் கீழ் பாலியல் வன்கொடுமை அல்லது பிரிவு 377 இன் கீழ் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றத்திற்காக கணவர் மீது வழக்குத் தொடர முடியாது என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கருமுட்டையை பாதுகாக்க மறுப்பு.. நீதிமன்றத்தை அணுகிய திருநம்பி.. விநோத வழக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com