Kamaraj inscription damaged: மாத்தூர் தொட்டிப் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு மர்ம நபர்களால் சேதத்துக்குள்ளாக்கப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kamaraj inscription damaged: மாத்தூர் தொட்டிப் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு மர்ம நபர்களால் சேதத்துக்குள்ளாக்கப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: February 11, 2025 at 11:22 pm
கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலத்தில் கர்மவீரர் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டித் தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில், இத்தகைய அநாகரீக வன்முறைச்செயலுக்கு காரணமானவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்று கொண்டுள்ள அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
கடும் நடவடிக்கை
மேலும், இத்தகைய அநாகரீக வன்முறைச்செயலுக்கு காரணமானவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமீபகாலமாக அப்பகுதியில் மதவாத சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிற நிலையில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
எனவே, சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லையெனில், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுகிற நிலை உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.
கடும் கண்டனம்
எனவே, காவல்துறையினர் இந்த கல்வெட்டு உடைப்பு சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பெருந்தலைவர் காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டை உடைத்து, சேதப்படுத்தப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
கல்வெட்டு உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலையும், கல்வெட்டும் விரைவில் திறக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அப்பகுதியில் நீதி கோரி காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : திருப்பூரில் மாணவிகளுக்கு தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com